ஆக்சன் படங்களுக்கு முழுக்கு போட அஜித் முடிவா?
அஜித் நடிக்கவுள்ள 58வது படமான ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘அஜித் 59’ படத்தை மோகன்ராஜா இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் பில்லா, மங்காத்தா போன்று நெகட்டிவ் கேரக்டரை கொண்ட திரைப்படம் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து மோகன்ராஜா தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘அஜித்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்வேன். அந்த படம் அஜித் நெகட்டிவ் ரோலில் ‘மங்காத்தா’, ‘பில்லா’ போன்ற படங்களுக்கு இணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அஜித் இனிமேல் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆக்சன் படங்களை குறைத்து கொண்டு குடும்ப செண்டிமெண்ட் கதையை மட்டும் அவர் விரும்பி கேட்டுவருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.