போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: பொதுமக்கள் நிம்மதி
கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. எனவே போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை முதல் வேலைக்கு திரும்புவார்கள் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன
ஊதிய உயர்வு உள்பட தங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களை சென்னை ஐகோர்ட் நியமனம் செய்துள்ளது. இதனை அடுத்து வேலைநிறுத்தப் பேராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
மேலும் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், பொதுமக்களின் நலனை கருதியே தற்காலிகமாக இந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும் சிஐடியு சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். மேலும் 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்க தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.