தமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் மட்டுமல்லாது உலகமுள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால், நாங்கள் பெருமையடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னாதாக, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது