டிரம்ப் இன்னும் ஒரே ஒரு சோதனையில் தேறவில்லை: வெள்ளை மாளிகை

டிரம்ப் இன்னும் ஒரே ஒரு சோதனையில் தேறவில்லை: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல் எடை பரிசோதனை தவிர மற்ற அனைத்து சோதனையிலும் தேறிவிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக தொடர்வதற்கு டிரம்ப் போதிய மனநிலையில் இல்லை என்று சர்ச்சைகள் எழுந்த நிலையில், முதன் முறையாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. இந்த சோதனையை நடத்திய வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவர் ரோனி ஜாக்சன் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. இதில் எல்லா சோதனையிலும் டிரம்ப் தகுதி பெற்றுள்ளார். ஆனால் அவர் இன்னும் 4 முதல் 7 கிலோ வரையில் உடல் எடையை மட்டும் குறைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மருத்துவர் தெரிவித்தார்.

Leave a Reply