இழுபறியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்துவேறுபாடு: வழக்குகள் முடங்குமா?

இழுபறியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்துவேறுபாடு: வழக்குகள் முடங்குமா?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு இடையே சமீபத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகள் நேற்று அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இக்கூட்டத்தில் புகார் அளித்த முக்கிய நீதிபதியான செல்லமேஸ்வர் பங்கேற்கவில்லை என்பதால் இருதரப்புக்கும் இடையிலான கருத்துவேறுபாடு நீடிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் செல்லமேஸ்வர் தவிர மற்ற மூன்று நீதிபதிகள் தலைமை நீதிபதியுடன் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு நிகழ்ந்த 15 நிமிடங்களில் எந்தவித தீர்வும் காணப்படாமல் முடிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீதிபதிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இழுபறிநிலை நீடிப்பதாகவும், இந்த பிரச்சினை இன்னும் ஒருவாரத்திற்கு தீர வாய்ப்பில்லை என்று நீதிபதிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுவதாக நான்கு நீதிபதிகளும் சமீபத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் கூட்டாக புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply