ஒரே விமானத்தில் இரண்டு தமிழர்களின் உடல்கள்: சோகமயமான கோவை விமான நிலையம்

ஒரே விமானத்தில் இரண்டு தமிழர்களின் உடல்கள்: சோகமயமான கோவை விமான நிலையம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மர்ம மரணம் அடைந்த சரத்பிரபு மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக வீரர் சுரேஷ் ஆகிய இருவரது உடல்களும் நேற்று கோவை விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்தது. இந்த இரு உடல்களுக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்

பின்னர் சரத்பிரபுவின் உடல் அவரது சொந்த ஊரான திருப்பூர் அருகேயுள்ள பாரப்பாளையம் என்ற கிராமத்திற்கும், ராணுவ வீரர் சுரேஷின் உடல் அவரது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டாரசெட்டிப்பட்டி என்ற கிராமத்திற்கும் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.

இருவரது உடல்களும் இன்று அவரவர் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த இறுதிச்சடங்கில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply