டெல்லி பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து: 17 பேர் பரிதாப பலி

டெல்லி பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து: 17 பேர் பரிதாப பலி

டெல்லியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 17 பேர் உடல் கருகி மரணம் அடைந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியில் உள்ள பவானா தொழிற்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் நேற்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மளமள பரவிய தீ பிளாஸ்டிக் குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயணைப்புத்துறையினருக்கு முதலில் தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காற்றின் வேகத்தால் தீ நாலாபுறமும் பரவியபோதிலும் தீயணைக்கும் வீரர்கள் தொடர்ந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் முதலில் 9 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த விபத்தில் காயம் அடைந்த சிலரும் மரணம் அடைந்துவிட்டதால் தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருசிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply