மாமல்லபுரத்தை இனி மக்கள் மறந்துவிட வேண்டியதானா?
தற்போதைய தமிழக அரசு பேருந்து கட்டணம், எம்.எல்.ஏக்களின் சம்பளம், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு என அனைத்து வகைகளையும் உயர்த்தும் அரசாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையும் மாமல்லபுரம் உள்பட தொன்மையான சுற்றுலாத்தளங்களை பார்க்க கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
இதற்கு முன்னர் மாமல்லபுரத்தின் சிற்பங்களை கண்டுகளிக்க இந்தியர்களுக்கு 30 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 500 ரூபாயும் இருந்த நிலையில் தற்போது அது இந்தியருக்கு பணமாக செலுத்த நபர் ஒருவருக்கு 40 ரூபாயும், வங்கி அட்டை மூலமாகச் செலுத்தினால் 35 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பணமாகச் செலுத்த 600 ரூபாயும், வங்கி அட்டை மூலம் செலுத்தினால் 550 ரூபாய் எனவும் உயர்த்தி நிர்ணயம்செய்துள்ளனர்.
இதே போல் மற்ற இடங்களில் இந்தியர் மற்றும் வெளிநாட்டினர் முறையே 15 ரூபாய், 500 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் கட்டண உயர்வுகுறித்து, 60 நாள்களுக்குள் சுற்றுலாப்பயணிகள் தங்கள் கருத்தை தலைமையகத்துக்குத் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அதிருப்தியில் இருக்கின்றனர்.