ஜப்பானில் பயங்கரமாக வெடித்து சிதறிய எரிமலை: ராணுவ வீரர் பரிதாப பலி
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஒரு எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக பலியானார். மேலும் ஆறு பேர் படுகாயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜப்பானில் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள குசட்சு ஷிரேன் என்ற எரிமலை அவ்வப்போது சிறிய அளவில் வெடித்து பயமுறுத்தி வந்த நிலையில் நேற்று இந்த எரிமலை கடுஞ்சீற்றத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் நெருப்புப்பாறைகள் சிதறி விழுந்தன. இந்த பாறைகள் தாக்கி ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
இந்த எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட பனிச்சரிவில் 78 பேர் சிக்கியுள்ளதாகவும் அவர்களது நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றும் அவர்களை தேடும் பணியில் ஜப்பான் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன