ஒரு காட்சியை கூட நீக்காமல் பாகிஸ்தானில் திரையிடப்பட்ட பத்மாவத்

ஒரு காட்சியை கூட நீக்காமல் பாகிஸ்தானில் திரையிடப்பட்ட பத்மாவத்

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கிய ‘பத்மாவத்; திரைப்படம் இந்தியாவில் ஒருசில மாநிங்களில் பிரச்சனை காரணமாக திரையிடப்படவில்லை. மேலும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஒருசில காட்சிகள் நீக்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன் தினம் வெளியானது.

இந்த படத்தில் ராணிபத்மினி குறித்தோ ராஜபுத்திர அரசு குறித்தோ ஒரு காட்சி கூட தவறாக இல்லை என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த போதிலும், இந்த படத்திற்கு எதிரான போராட்டங்கள் இன்னும் முடியவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது. அதுவும் ஒரு காட்சி கூட நீக்கப்படாமல் சென்சார் செய்த படம் அப்படியே திரையிடப்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

Leave a Reply