பித்தவெடிப்பை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
பெரும்பாலானர்களுக்கு கால் பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பு பெரும் தொல்லையை கொடுக்கும். இதற்கு பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதே காரணம்.
பனிக்காலத்திலும் கோடையிலும் தொல்லை கொடுக்கும் இந்த பித்தவெடிப்பு பெரும்பாலும் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கே வருகிறது. வெறும் கால்களில் நடப்பது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவதும் பித்தவெடிப்புக்கு காரணம்
ஆரம்பநிலையில் உள்ள பித்த வெடிப்பை தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லிக்விட் பாரபின் எண்ணெய் ஆகிய ஏதாவது ஒன்றை பாதங்களில் தடவுவதால் குணப்படுத்தலாம். இவை அனைத்தும் பாதங்களுக்கு ஈரத்தன்மையை தரும் வல்லமை படைத்தவை. அதிக பித்தவெடிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் களிம்புகள் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தலாம்.
பித்தவெடிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?
1. சத்துள்ள, சரிவிகித உணவை எடுத்து கொள்ள வேண்டும்
2. தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
3. தினமும் 2 முறை சோப்புப் போட்டுக் குளித்துப் பாதங்களைப் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
4. தோல் வறண்டு இருந்தால் ‘லிக்விட் பாரபின்’ அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவலாம்
5. காலணிகள் மற்றும் ஷூக்கள் பொருத்தமாக இருக்க வேண்டும்
6. பருத்தி துணியிலான சாக்ஸ்கள் நல்லது