மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் சவால்!

மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் சவால்!

பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் முக்கிய பஸ் ரூட்டுக்களை தமிழக அமைச்சர்கள் பினாமி பெயரில் வாங்கியதுதான் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்

இதற்கு இன்று பதிலளித்த தமிழக அமைச்சர் ஜெயகுமார்,’ அமைச்சர்கள் பஸ் ரூட் வாங்கியதாக ஸ்டாலின் ஆதாரம் வைத்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும் என்று சவால் விடுத்தார்.

மேலும் கடந்த திமுக ஆட்சியில் திரையுலகிற்கு எத்தனை இடர்பாடுகள் வந்தது என்பது அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவிருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் வெளியே கூற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply