கலக்கப்போவது யாரு புகழ் தீனா நடிக்கும் அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பு ஆரம்பம்

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி புகழ் தீனாவை தனுஷ் ஹீரோவாக நடிக்க வைக்கிறார் என்ற செய்தியை நாம் ஏற்கனவே அறிந்ததே. அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

மலையாளத்தில் 100 நாட்டிகள் ஓடிய “கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்” என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கிறார் நடிகா் தனுஸ். இவரது வுண்டா்பார் என்று நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய நடிகா் திலீப்பின் நண்பா் நாதிர்ஷா என்பவா் தான் தமிழிலும் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் தமிழில் அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை என்ற பெயரில் ரீ மேக் செய்யப்படுகிறது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தீனா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார் தனுஷ். ஏற்கனவே தீனா ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவா் தனுசின் ப.பாண்டி படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவா் போன் கால் மூலம் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களை கலாய்க்கும் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

தனுஷ் தயாரிக்கும் இந்த படத்தை படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. அடிக்கடி மலையாள படங்களை தமிழில் டப்பிங் செய்தாலும், நீண்ட நாளுக்கு பிறகு ரீ மேக் செய்யப்படும் படம் இது தான்.

Leave a Reply