முத்தலாக் தடைச்சட்டம் கொண்டுவருவதற்கா மக்கள் வாக்களித்தனர்? பிரவீன் தொகாடியா
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காகவே பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தனர் என்றும், முத்தலாக் தடைச்சட்டம் கொண்டுவருவதற்காக அல்ல என்றும் விஸ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
ராமர் கோவில் கட்டுவதற்குத் தான் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர் என்றும், முத்தலாக் தடைச்சட்டம் கொண்டுவருவதற்கு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்