ஒரே வேலைக்கு 2 பேர் போட்டி: பூவா தலையா போட்டு பணி நியமனம் வழங்கிய அமைச்சர்

ஒரே வேலைக்கு 2 பேர் போட்டி: பூவா தலையா போட்டு பணி நியமனம் வழங்கிய அமைச்சர்

ஒரே வேலைக்கு இரண்டு சம தகுதி உடையவர்கள் போட்டி போட்டதால் அவர்களில் யாருக்கு வேலை என்பதை உறுதி செய்ய பூவா தலையா போட்டு பணி நியமனம் வழங்கிய பஞ்சாப் அமைச்சரின் செயல் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பி.பி.எஸ்.சி. என்னும் பஞ்சாப் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி, பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு பணி நியமனம் நடந்தது. இந்த தேர்வில் ஒரு பதவிக்கு இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவருக்குத்தான் வேலை கிடைக்கும். ஆனால் இருவரும் சம கல்வித்தகுதி, அனுபவம் பெற்றவர்களாக இருந்ததால் யாருக்கு வேலை என்பதை உறுதி செய்ய பஞ்சாப் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சரண்ஜித் சிங் ‘டாஸ்’ என்னும் பூவா, தலையா முறையை பின்பற்றினார். இது தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பணி நியமனம் செய்ய பூவா தலையா போட்ட அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

Leave a Reply