முதுகுவலி இருப்பவர்கள் இதெல்லாம் செய்யக்கூடாது

முதுகுவலி இருப்பவர்கள் இதெல்லாம் செய்யக்கூடாது

முதுகுவலி என்பது சுமார் 40 வயதை தாண்டியவுடன் பெரும்பாலானோர்களுக்கு வரும் நோயாக உள்ளது. முதுகுவலி உள்ளவர்கள் கீழ்க்கண்டவற்றை செய்யமால் இருந்தால் வலியில் இருந்து தப்பிக்கலாம்

1. இருசக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையில் நேராக முதுகு வளையாமல் உட்கார்ந்து நேராக பார்வை இருக்கும்படி ஓட்டவேண்டும்.

2. படுக்கையில் படுக்கும்போது கனமான தலையணைகளை பயன்படுத்தாமல், மென்மையான தலையணைகளை பயன்படுத்துங்கள். அ

3. தினமும் 25 நிமிடங்கள் வேகமாக நடப்பது அவசியம். 70 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார வேண்டாம்

4. உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையைவிட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்க வேண்டும் பின்னர் மீண்டும் வேலையை தொடங்கலாம்.

5. தினமும் 21 முறையாவது குனிந்து பாதத்தைத் தொட்டுவிட்டு நிமிருங்கள். அதிக பாரமான பொருட்களைத் தூக்கும்போது, குனிந்து தூக்காதீர்கள். தினமும் காலை, மாலை 20 முறையாவது கைகளை வானத்தை நோக்கி நீட்டி, இறக்குங்கள். இவற்றை அன்றாடப் பழக்கமாக்கிக் கொண்டாலே முதுகுவலியில் இருந்து எளிதாக விடுபடலாம்

Leave a Reply