அளவுக்கு அதிகமான வருமானம் வருவதால் குடிமக்களுக்கு போனஸ் கொடுக்கும் நாடு
இந்தியாவின் கடன் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் நிலையில் ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் நாட்டின் வருமானம் அதிகரித்து கொண்டே போகிறது. அளவுக்கு அதிகமான வருமானம் வந்து கொண்டிருப்பதால் அந்நாட்டு தனது குடிமக்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது
இதன்படி 21 வயது நிரம்பிய குடிமகன் அனைவரும் இந்த போனஸை பெற தகுதியானவர் ஆவார். குடிமக்களின் வருவாய்க்கு ஏற்ப இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்காக, 533 அமெரிக்க மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
சுமார் 27 லட்சம் குடிமக்கள் இதனால் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போதுமே பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாகும். பற்றாக்குறை பட்ஜெட் என்றால் வருவாயை விட செலவினங்களை அதிகம் கொண்ட பட்ஜெட்டாகும்.