பிரதமரை கேலியாக சித்தரித்து ஓவியம் வரைந்தவருக்கு சிறை

பிரதமரை கேலியாக சித்தரித்து ஓவியம் வரைந்தவருக்கு சிறை

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அவர்களை கோமாளி போல சித்தரித்த பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா என்பவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை அளித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மலேசியாவில் பிரதமராக இருந்து வரும் நஜிப் ரசாக் அவர்களை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அவர் மீது மலேசிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து உள்ள நிலையில், ஓவியர் பாஹ்மிக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Leave a Reply