பொறியியல் கலந்தாய்வில் திடீர் மாற்றம்: மாணவர்கள் மகிழ்ச்சி

பொறியியல் கலந்தாய்வில் திடீர் மாற்றம்: மாணவர்கள் மகிழ்ச்சி

வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சா் உயா்கல்வித்துறை அமைச்சா் அன்பழகன் தொிவித்துள்ளார்.

வருகிற மார்ச் 12ம் தேதி முதல் 12ம் வகுப்புக்கான பொதுத்தோ்வுகள் தொடங்குகின்றன. இதனைத் தொடா்ந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முதல் மருத்துவத்திற்கு நீட் தோ்வு அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் பொறியல் கலந்தாய்வு மட்டும் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் அன்பழகன் இன்று செய்தியாளா்களை சந்தித்தபோது கூறியதாவது: வரும் கல்வியாண்டு (2018-19) முதல் ஆன்லைன் மூலமே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்

ஆன்லைன் கலந்தாய்வில் பங்குகொள்ள இயலாதவா்களுக்காக மாவட்டம் வாரொஉஆல 44 கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெறும். சிறிய மாவட்டங்களில் ஒரு கலந்தாய்வு மையமும், பெரிய மாவட்டங்களில் 2 கலந்தாய்வு மையங்களும் அமைக்கப்படும்

மேலும் கலந்தாய்வு மையங்கள் அனைத்தும் அரசு பொறியியல், கலைக்கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெறும். தனியார் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெறாது

இவ்வாறு உயா்கல்வித்துறை அமைச்சா் கூறியுள்ளார்.

Leave a Reply