நடிகை ஸ்ரீதேவி எதனால் இறந்தார்! தடயவியல் அறிக்கை இதோ

நடிகை ஸ்ரீதேவி எதனால் இறந்தார்! தடயவியல் அறிக்கை இதோ

நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பால் தான் இறந்துள்ளார், சந்தேகங்களுக்கு இடம் இல்லை என்று தடவியல் மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து துபாய் பத்திரிக்கையாளர் வாசுதேவ ராவ் கூறுகையில், ”மருத்துவமனையில் ஒருவர் இறக்கும்பட்சத்தில் எளிதில் உடற்கூறு ஆய்வு முடிந்து கொடுத்து விடுவார்கள். ஆனால், மருத்துவமனைக்கு வெளியே ஒருவர் இறக்கும் நிலையில், போலீசாருக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வழக்குப் பதிவு செய்து , விசாரணை மேற்கொள்வார்கள். ஒருவேளை இறந்தவர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில், கூடுதல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

முதலில் அல் க்யுசைஸ் பிணவறையில் இறந்தவரின் உடல் வைக்கப்படும். பின்னர் தடவியல் அத்தாட்சிக்கான பொதுத் துறையால் தடவியல் பரிசோதனை நடத்தப்படும். பின்னர் உடல் போலீசாரிடம் ஒப்டைக்கப்படும். இதன் பின்னரே போலீசார் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்.

இதன் பின்னர் இறந்தவரின் விசா சரி பார்க்கப்படும். துபாயில் இருக்கும் இந்தியத் தூதரகம் இறந்தவரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து, தடையில்லா சான்றிதழும், இறப்பு சான்றிதழும் கொடுக்கும். இதன் பின்னரே இந்தியாவுக்கு உடல் எடுத்து வர முடியும்.

இந்த ஏற்பாடுகளுக்கு இடையே போலீஸ் மேலும் பல கடிதங்களை வழங்கும். மருத்துவமனையில் இருந்து பிரேதம் எடுத்து வரப்பட்டதா? பிணவறையில் இருந்து எடுத்து வரப்பட்டதா? எம்பால்மிங் செய்யப்பட்டதா? எங்கு செய்யப்பட்டது, எங்கு இறுதி மரியாதை நடைபெற இருக்கிறது, எந்த விமான நிலையத்தில் இருந்து எங்கு செல்கிறது, எந்த விமானத்தில் எடுத்து செல்லப்படுகிறது போன்ற அனைத்து விவரங்கள் அடங்கிய கடிதங்கள் கொடுக்கப்படும். இவ்வாறு துபாய் பத்திரிக்கையாளர் வாசுதேவ ராவ் கூறியுள்ளார்.

Leave a Reply