ஆக்ரோஷத்தை களத்தில் காட்டுவது சரியா? கோஹ்லிக்கு ஸ்டீவ்வாஹ் அறிவுரை

ஆக்ரோஷத்தை களத்தில் காட்டுவது சரியா? கோஹ்லிக்கு ஸ்டீவ்வாஹ் அறிவுரை

விராத்கோஹ்லி என்றாலே ஆக்ரோஷத்திற்கு பெயர் போனவர் என்பது அனைவரும் தெரிந்ததே. அதிலும் அவர் களத்தில் காட்டும் ஆக்ரோஷம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்

இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ்வாஹ், கோஹ்லியின் ஆக்ரோஷம் குறித்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: தென்ஆப்பிரிக்க பயணத்தில், இந்திய கேப்டன் விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்தேன். இதில் அவரது ஆக்ரோஷமான போக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஒரு கேப்டனாக அவர் கற்றுக்கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது. கேப்டன்ஷிப்பில் அவர் இன்னமும் முன்னேற்றம் கண்டு வருகிறார்.

அணியில் உள்ள எல்லா வீரர்களும் தன்னை போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை உணர வேண்டும். உதாரணமாக, ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் மிகவும் அமைதியாக செயல்படக்கூடியவர்கள். சில வீரர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஆக்ரோஷத்தை கூட்ட வேண்டும். சில நேரங்களில் ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply