சிரியாவுக்கு உதவுகிறதா வடகொரியா? ஐநா குற்றச்சாட்டால் பரபரப்பு
சிரியாவுக்கு ஏற்கனவே ரஷ்யா பகிரங்கமாக ராணுவ உதவி செய்து வருகிறது. இதனால் தான் சிரியா அரசு போராட்டக்காரர்களை அதிரடியாக தாக்கி வருகிறது
இந்த நிலையில் ரஷ்யாவை அடுத்து வடகொரியாவும் சிரியாவுக்கு ரசாயன குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் கொடுத்து உதவி செய்து வருவதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது
ரசாயன குண்டு எனப்படும் குளோரின் குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தை வடகொரியாவின் ஏவுகணை நிபுணர்கள் சிரியாவுக்கு நேரில் சென்று வழங்கியுள்ளதாக ஐநா கூறி வருகிறது. இந்த தகவலை அமெரிக்க பத்திரிகைகளும் குறிப்பிட்டிருந்தாலும் இதுகுறித்து வடகொரியா இன்னும் எந்தவித கருத்தையோ, மறுப்பையோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது