செல்போனை அடுத்து செட்டாப் பாக்ஸ்: ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புரட்சி

செல்போனை அடுத்து செட்டாப் பாக்ஸ்: ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புரட்சி

இந்தியாவில் கிராமத்தில் உள்ள பாமரர்களுக்கும் 4ஜி சேவை கிடைக்க காரணமாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஒரு தொலைத்தொடர்பு துறையில் புரட்சி செய்தது என்றே கூறலாம். 4 ஜி கனெக்சன், இலவச அழைப்புகள், தினமும் 1ஜிபி டேட்டா இலவசம் என அதிரடி சலுகைகளை வாரி வழங்கி தற்போது வலுவாக காலூன்றியுள்ளது.

இந்த நிலையில் செல்போனை அடுத்து செட்டாப் பாக்ஸ் துறையில் அடுத்த புரட்சியை ஆரம்பித்துள்ளது. தற்போதுள்ள தொலைக்காட்சி டிஜிட்டல் சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு தொகை என வசூலித்து வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு வருடத்திற்கு இலவச சேவை என்ற அதிரடியுடன் இந்த துறைக்குள் நுழைகிறது.

தற்போது கேபிள் டிவி என்ற நிலை மாறி அனைவரும் செட்டாப் பாக்ஸ் வைக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செல்போன் சேவையைப் போன்று தொலைக்காட்சி சேவைகளை வழங்குவதிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் மொபைல் சேவையில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து மற்ற மொபைல் சேவை நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது போல், தற்போது தொலைக்காட்சி சேவையிலும் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போது ஒரு வருடத்துக்கு ஹெச்டி சேனல்கள் உட்பட மொத்தம் 500 சேனல்களை அடுத்த5 ஆண்டுகளுக்கும் ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) மூலம் இலவசமாக வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply