சட்டவிரோதமாக குடியேறிய 3000 பேர்களை நாடுகடத்திய மலேசியா

சட்டவிரோதமாக குடியேறிய 3000 பேர்களை நாடுகடத்திய மலேசியா

மலேசியா நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய ஆயிரக்கணக்கான குடியேறிகள் நாடுகடத்தப்பட்டதால் அந்நாட்டில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் பலர் சட்டவிரோத குடியிருப்பை அமைத்துள்ளதாக சமீபத்தில் கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, 3,036 பேர், சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இதேபோல் கடந்த 1990ஆம் ஆண்டு முதல், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநர் தட்டுக் ரொட்சி, நாடு கடத்தப்பட்டவர்களில் பிலிப்பைன்சின் 2,556 பேர், இந்தோனேசியாவின் 400 பேர் அடங்கியுள்ளனர். இதில் பிலிப்பைன்சை சேர்ந்த 691 பேர் படகில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply