ஆசிய மல்யுத்த போட்டி: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

ஆசிய மல்யுத்த போட்டி: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

கிர்கிஸ்தான் என்ற நாட்டில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இவர் ஆசிய மல்யுத்த போட்டியிலும் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் ஜப்பான் வீராங்கனை யுகி ஐரீ-யை அரையிறுதிப்போட்டியில் வென்றுள்ள வினேஷ் போகட்டுக்கு தங்கம் அல்லது வெள்ளி கிடைப்பது உறுதியாகியுள்ளது. சீன சுன் லீ-யுடன் மோதவிருக்கும் வினேஷ், தங்கம் வெல்ல வாழ்த்துவோம்

Leave a Reply