சுஹாசினி வெளியிட்ட மணிரத்னம் ரகசியம்

சுஹாசினி வெளியிட்ட மணிரத்னம் ரகசியம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இதுவரை ஒரு படத்தில் கூட யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்ததில்லை என்றும், அவர் நேரடியாக இயக்குனர் ஆனதாகவும், அவருடைய முதல் படம் ‘பல்லவி அனுபல்லவி’ என்றும் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்றும், மணிரத்னம் ஒரே ஒரு கன்னட படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாகவும் சுஹாசினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்/

விஷ்ணுவர்தன், அம்ப்ரீஷ், லட்சுமி நடித்த ரவிபந்துலி இயக்கிய கன்னட படம் ஒன்றில் உதவி இயக்குனராக மணிரத்னம் பணிபுரிந்துள்ளதாகவும், இந்த படத்தில் அவருடன் பழம்பெரும் இயக்குனர் வீணை எஸ்.பாலசந்தரின் மகனும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாகவும் சுஹாசினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் மணிரத்னம் ரசிகர்களுக்கு வியப்பை அளிப்பதாக உள்ளது. இருப்பினும் மணிரத்னம் அவர்கள் ஒருவர் மட்டுமே இன்றைய இளைஞர்களின் மனதை கவரும் வகையில் படமெடுக்கும் ஒரே பழைய இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply