டிரம்ப்-கிம் சந்திப்பு நடப்பது எப்போது?
அமெரிக்காவும் வடகொரியாவும் பகை நாடுகளாக இருந்து வரும் நிலையில் இந்த இரு நாடுகளால் மூன்றாம் உலகப்போர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக் மற்ற நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் வரும் மே மாதம் சந்திக்கவுள்ளார்களாம்.
இந்த சந்திப்பில் இருநாடுகளும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து இருநாட்டு அதிபர்களும் கலந்து ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.