இடைத்தேர்தல் முடிவு கூறுவது என்ன?
உபி மாநிலத்தின் இரண்டு தொகுதிகளிலும் பீகார் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவு நேற்று வெளிவந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக கோரக்பூர் தொகுதி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கோட்டை என்பதும், இந்த தொகுதியில் அவர் ஐந்து முறை வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவில் இருந்து பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு பலமான கூட்டணி இருந்தால் பாஜகவை வீழ்த்துவது எளிது என்பதும் புரிய வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் டெபாசிட்டை இழந்துள்ளதால், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது பாஜகவை எதிர்க்கும் அளவுக்கு வலுவான கூட்டணியாக இருக்காது என்றே கூறப்படுகிறது
எனவே பாஜகவை எதிர்க்க வேண்டுமானால் அதிக இந்திய அளவில் காங்கிரஸ் இல்லாத ஒரு மெகா கூட்டணி அவசியமாகிறது. ஆனாலும் இந்த கூட்டணியின் தலைவர் யார், பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி வரும்போது கருத்துவேறுபாடுகளும் மோதலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.