விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த டொயோட்டா கார்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் வசூல் அளவிலும் வெற்றி பெற்று சூர்யா, விக்னேஷ் சிவன் மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வெற்றி அடைந்ததை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, சூர்யா டொயோட்டா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளாஅர். சிகப்பு நிறத்தில் அட்டகாசமாக இருக்கும் இந்த காரின் சாவியை சூர்யாவிடம் இருந்து விக்னேஷ் சிவன் வாங்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது