பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவித்துணி போர்த்திய மர்ம நபர்கள்
சமீபத்தில் பாஜக பிரமுகர் எச்.ராஜாவின் அட்மின் செய்த காரியத்தால் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பதட்டநிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நாமக்கலில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மர்ம நபர்கள் காவித் துணியை போர்த்தி மாலை அணிவித்துச் சென்றுள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கலில் 1994ம் ஆண்டு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலைகள் அதிமுக சார்பில் நிறுவப்பட்டது. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்படுவதுபோல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்ற ஹெச். ராஜாவின் பேஸ்புக் பதிவைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலைகளை அவமதிக்கும் செயல்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இந்நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
எச்.ராஜா, பெரியார் சிலை, காவி துணி, திராவிடர் கழகம், அவமதிப்பு
Unknown person covered with saffron cloths on periyar mgr, anna statues