ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திர திட்டம்: மத்திய அரசு
ராமர் பாலத்தில் எந்தவிதமான சேதமும் இன்றி சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு, இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை தொடக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கில் மத்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் இந்த பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்தது.
அந்த பிரமாணப் பத்திரத்தில், “சேது சமுத்திர திட்டத்துக்கு அதிவிரைவில் மாற்றுப் பாதை கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படும். தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது