இன்றைய ராசிபலன்கள் 20/03/2018
மேஷம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். இரவு 8.23 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்
ரிஷபம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பயணங்களால் பலனடைவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
ராசி பலன்கள்
மிதுனம்
எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வேற்றுமதத்தவர் உதவுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ராசி பலன்கள்
கடகம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி பலன்கள்
சிம்மம்
இரவு 8.23 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி பலன்கள்
கன்னி
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இரவு 8.23 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசி பலன்கள்
துலாம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசி பலன்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
ராசி பலன்கள்
தனுசு
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசி பலன்கள்
மகரம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீ£கள். பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி பலன்கள்
கும்பம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பு வந்து பேசுவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி பலன்கள்
மீனம்
இரவு 8.23 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி பலன்கள்