காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? முதல்வர் விளக்கத்திற்கு ராமதாஸ் கண்டனம்

காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? முதல்வர் விளக்கத்திற்கு ராமதாஸ் கண்டனம்

சமீபகாலமாக தமிழகத்தை சேர்ந்த காவலர்கள் திடீர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். சமீபத்தில் அயனாவரம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஒருவரும், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் காவலர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டமன்றத்தில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘”காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் குடும்ப பிரச்சினை, உடல் நலக்கோளாறு, காதல் விவகாரம் உள்ளிட்ட சில தனிப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் உடல் நலன்காக்க அவர்களுக்கு வாராந்திர காவாத்து பயிற்சியுடன் யோகாசனம், உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்துடன் தனியார் மருத்துவமனைகள் மூலம் அவ்வப்போது காவல் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்புகளில் காவலர்கள் மற்றும் அவர் கள் குடும்பத்தினர் பயனுறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

முதல்வரின் இந்த விளக்கத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:”காதல் தோல்வி உள்ளிட்ட காரணங்களால் தான் காவலர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்: எடப்பாடி பழனிச்சாமி – இயற்கை உபாதைகளைக் கூட பொறுத்துக்கொண்டு எடப்பாடிக்கு காவலுக்கு நிற்கும் காவலர்களை இதை விட கேவலமாக கொச்சைப்படுத்த முடியாது!” என்று கூறியுள்ளார்.

Why policemen suiciden, explains TN CM

Leave a Reply