கேரள தலைவர்களுடன் -வைகோ திடீர் சந்திப்பு ஏன்?
கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சண்டி உள்பட கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டும் வகையில், மதுரையில் இருந்து வரும் 31-ம் தேதி நடைபயணம் ஒன்றை தொடங்க வைகோ திட்டமிட்டுள்ளார். இந்த நடைப்பயணம் ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நடைபயணத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் கேரளா சென்றுள்ள வைகோ, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரை சந்தித்து பேசினார். இவர்கள் அனைவரிடமும் தனது நடைபயணத்துக்கு ஆதரவு அளிக்கும்படி வைகோ கேட்டுக்கொண்டார்.
அப்போது, நியூட்ரினோ திட்டத்திற்காக பாறைகளை உடைப்பதால் அருகில் உள்ள இடுக்கி அணையும் முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும் என அவர் கூறினார். அணு ஆயுதப்போர் மூண்டால் தென் தமிழகம் மற்றும் கேரளம் அழிந்து போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்