ஸ்டாலின் போலி டுவிட்டர் பக்கத்தில் விஷமத்தனமான தகவல்: திமுக அதிர்ச்சி
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலியான டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு விஷமத்தனமாக பிரச்சாரத்தை மர்ம நபர்கள் செய்து வருவதால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. செயல் தலைவா் ஸ்டாலின் சா்ர்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகா் இளங்கோ ஆகியோர் நேற்று சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில காலங்களாக ஒருசில சமூக விரோதிகள் என்னுடைய ட்விட்டா் பக்கம் போன்று ஒரு போலி கணக்கை உருவாக்கியுள்ளனா். அந்த பொய்யான டுவிட்டர் பக்கத்தில் நான் சொல்லாத கருத்துகளை, என் பெயரில் பதிவிடுகின்றனா். தமிழ் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கக்கூடிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா். இத்தகைய தவறான தகவல்களை பரப்புவது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிாிவின் படியும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே அந்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக தி.மு.க மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில சமூக விரோதிகள் என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துகளை சொன்னதுபோல போலிப் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த விஷமச்செயலை செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன் pic.twitter.com/woEkkc3aql
— M.K.Stalin (@mkstalin) March 22, 2018