திமுக ஆட்சி அமைக்க யார் தயவும் தேவையில்லை: ஸ்டாலின் பேச்சால் காங்கிரஸ் அதிர்ச்சி

திமுக ஆட்சி அமைக்க யார் தயவும் தேவையில்லை: ஸ்டாலின் பேச்சால் காங்கிரஸ் அதிர்ச்சி

காவிரி மேலாண்மை விவகாரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும் என்று அதிமுக கோரி வரும் நிலையில், யார் தயவும் இன்றி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என நேற்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஈரோட்டில் நேற்று நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் உரையாற்றிய ஸ்டாலின், ‘சாதனை விழா கொண்டாடும் அளவுக்கு தமிழக அரசு என்ன சாதனை செய்து விட்டது எனக் கேள்வி எழுப்பினார். வரும் தேர்தலில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், காவிரி விவகாரம் விவசாயிகள் பிரச்னை என்பதால், அதை வைத்து திமுக அரசியல் செய்யாது என்றும், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி சிறை நிர‌ப்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்

 

Leave a Reply