சொந்த மகளை விற்பனை செய்ய முயன்ற தந்தைக்கு 60 ஆண்டு சிறை

சொந்த மகளை விற்பனை செய்ய முயன்ற தந்தைக்கு 60 ஆண்டு சிறை

பெற்ற மகளை விற்பனை செய்ய முயன்ற தந்தைக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் விற்க முயன்ற மகளுக்கு 4 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலி என்பவருக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில் இவர் தனது மகளை மனைவியிடம் இருந்து கடத்தி சென்று அவளை ‘செக்ஸ்’சில் ஈடுபடுத்துவதற்கு விற்பனை செய்ய முயன்றார்.

அதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலியை கைது செய்தனர். அவர் மீது ஹாரீஸ் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 30 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் 75 வயது வரை இவருக்கு ‘பரோல்’ வழங்க கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தனது மனதை வெகுவாக பாதித்து விட்டது என உதவி அட்டர்னி ஜெனரல் கூறினார்.

Leave a Reply