பாகிஸ்தானில் முதல் திருநங்கை செய்தி தொகுப்பாளார்

பாகிஸ்தானில் முதல் திருநங்கை செய்தி தொகுப்பாளார்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மார்வியா மாலிக் என்ற திருநங்கை அந்நாட்டின் முதல் செய்தி தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்ருள்ளார். செய்தி நிறுவனத்தில் ஆசிரியராக பணியாற்றி வநத இவர் முதல் முதலாக மார்ச் 23-ம் தேதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்தார்.

திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் செய்தி தொகுப்பாளராக பணியாற்றுவது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய மார்வியா, ‘ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மூன்றாவது பாலினமான எங்கள் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும்’ என கூறினார்.

மார்வியா மாலிக்கிற்கு பாராட்டுக்கள் குவிகின்றன. திருநங்கைகள் பணியாற்ற வேண்டும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இது திருநங்கை சமூகத்தினருக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

திருநங்கைகள் தங்களுடைய பாலின அடையாளத்தை முடிவு செய்துகொள்ள அதிகாரம் அளித்து பாகிஸ்தான் செனட் அவை சமீபத்தில் மசோதாவை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply