காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினிகாந்த் பதிவு செய்த டுவீட்
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு மவுனமாகவே இருக்கிறது.
உச்சநீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து ரஜினி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
`காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்.’ இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்.
I sincerely hope justice will prevail.— Rajinikanth (@rajinikanth) March 29, 2018