செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் கூட்டம்? நாசாவின் அதிர்ச்சி புகைப்படம்
செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே மனிதர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது நாசா வெளியிட்ட ஒரு புகைப்படம் மூலம் அங்கு விலங்குகள் கூட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாசா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பிய ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்பி வருகிறது. இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி பல்வேறு விதமான யூகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விண்கலம் அனுப்பிய ஒரு படத்தில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. படத்தைப் பார்த்த நிபுணர்கள் டைனோசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டன. டைனோசருக்கும் முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த விண்கலம் அனுப்பிய இன்னொரு புகைப்படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது, இது செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராமாகும். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன். என கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது