இந்தியாவில் யமஹா YZF R1 விலை குறைக்கப்பட்டது

இந்தியாவில் யமஹா YZF R1 விலை குறைக்கப்பட்டது

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடலின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் யமஹா YZF R1 மற்றும் MT-09 விலைகள் 12% குறைக்கப்படுகிறது. இரண்டு யமஹா மோட்டார்சைக்கிள்களும் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் CBU மோட்டார்சைக்கிள்களுக்கான இறக்குமதி வரி 75% இல் இருந்து 50% ஆக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து விலை குறைப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மற்ற பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்து வருகின்றன.

யமஹா YZF R1 விலை ரூ.20.73 லட்சத்தில் இருந்து ரூ.18.16 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ.2.57 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று யமஹா MT-09 விலை ரூ.10.88 லட்சத்தில் இருந்து குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.

யமஹா YZF R1 ஸ்போர்ட்பைக் மாடலில் 4-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 200 பிஹெச்பி பவர் மற்றும் 112 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது. யமஹா MT-09 மாடலில் மூன்று சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 114 பிஹெச்பி பவர் மற்றும் 87 என்எம் டார்கியூ கொண்டிருக்கிறது.

Leave a Reply