பீகார் ராமநவமி வழக்கு: மத்திய அமைச்சர் மகன் கைது
கடந்த மாதம் ராமநவமியையொட்டி பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் ஊர்வலத்தின்போது, திடீரென இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக வெடித்தபோது நடத்த கல்வீச்சு தாக்குதலில் போலீஸ்காரர்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக நாத்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தன.
இந்த நிலையில் இந்த கலவர வழக்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேயின் மகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அஸ்வினிகுமார் பாட்னாவில் இருந்து பாகல்பூர் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஏ.ஆர்.உபாத்யா முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரிஜித் சாஸ்வத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது