காமவெல்த் போட்டி நாளை தொடக்கம்: 71 நாடுகள் கலந்து கொள்கின்றன
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றது
ஒலிம்பில், ஆசிய விளையாட்டு போட்டிகள் போல் உலக அளவில் பிரபலமான போட்டி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் என்பது தெரிந்ததே. நாளை ஆஸ்திரேலியாவில் தொடங்கும் இந்த போட்டி வரும் 15 தேதி வரை நடைபெறும்
இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் இந்தியா 17வது முறையாக கலந்து கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது