ஆளுநருடனான சந்திப்பில் நடந்தது என்ன?- முதல்வரின் பதிலுக்கு நெட்டிசன்கள் கிண்டல்

ஆளுநருடனான சந்திப்பில் நடந்தது என்ன?- முதல்வரின் பதிலுக்கு நெட்டிசன்கள் கிண்டல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று தமிழக ஆளுனரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயகுமார் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து முதல்வர் கூறியதாவது: ”காவிரி நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், மேலும் பல்வேறு போராட்டங்கள் குறித்தும் ஆளுநர் எங்களிடம் கேட்டார். அதற்கு உரிய பதிலை அவர் திருப்தியடையும் அளவுக்கு அளித்துள்ளோம். தமிழகத்தில் கோடையில் தண்ணீர் பிரச்சினை குறித்து கேட்டார். அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தோம். நாங்கள் கூறிய கருத்துகளை ஆளுநர் உன்னிப்பாக கவனித்து திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார்” என்றார்.

உரிய பதில் என்றால் என்ன பதில் என்பதை முதல்வர் மக்களுக்கு தெரிவிக்காமல் கவர்னர் உன்னிப்பாக கவனித்தார் என்று கூறுவது முதல்வருக்கு அழகா? என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply