மம்தா பானார்ஜியின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு
பாஜகவுக்கு எதிராக 3வது அணியை உருவாகும் முயற்சியில் உள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழகத்திற்கு வருகை தந்து திமுக உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக தனது தமிழக வருகையை அவர் ஒத்திவைத்துள்ளார். அதுமட்டுமின்றி மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்தும் அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மம்தாபானர்ஜியின் தரப்பு கூறியபோது, ‘ மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, மம்தாவின் தமிழகம் வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்துக்கு நிச்சயம் வருவார் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது. இதனால் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.