மான் வழக்கில் கைதான சல்மான்கானுக்கு கைதி எண் 106
அபூர்வவகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு 5 வருட சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட சல்மான்கான், நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சல்மான்கானுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அவரது வழக்கறிஞர், ஆனந்த் தேஸ் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
`நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தாலும், அவர்களது தீர்ப்பை நான் மதிக்கிறேன். இருப்பினும், தற்காலிகமாக தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அல்லது ஜாமீன் வழங்கக்கோரி நாளை காலை 10.30 மணியளவில் ஹியரிங் நடத்த நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
சல்மான்கானுக்கு சிறையில் வழங்கப்பட்டுள்ள எண் குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி கூறியபோது, ‘சல்மான் கானுக்கு சிறை உடை நாளை வழங்கப்படும். அவருக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளது. அவர், தங்கியிருக்கும் அறைக்கு அருகில் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.