மீண்டும் ஹரி-சூர்யா, ஆனால் ‘சிங்கம் 4’ அல்ல
சிங்கம் படத்தின் மூன்று பாகங்களில் இணைந்த இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா தற்போது மீண்டும் இணையவுள்ளதாகவும், ஆனால் இந்த முறை ‘சிங்கம் 4’ படம் இல்லை என்றும் குடும்பம், செண்டிமெண்ட் கலந்த கதை என்றும் கூறப்படுகிறது
தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வரும் சூர்யா, நீண்ட இடைவெளிக்கு பின் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதை ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ஹரி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்கு பின் ஹரியுடன் மீண்டும் இணைகிறார் சூர்யா