நீரவ் மோடியை கைது செய்ய சீனா ஒப்புதல்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை பிடிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்திய அரசு முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் சட்ட விதிகளுக்குட்பட்டு நிரவ் மோடியை கைது செய்ய ஹாங்காங் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று சீனா தெரிவித்துள்ளது. இதனால் நீரவ் மோடி விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
நீரவ் மோடி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரணட்டை பிறப்பித்துள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஹாங்காங்கில் நீரவ் மோடி தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியதை அடுத்து. வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் பேசும்போது, `சீனாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஹாங்காங் அரசிடம் நிரவ் மோடியை கைது செய்ய கோரிக்கையை வைத்துள்ளதாக கூறினார்.
ஹாங்காங் அரசுடன் இந்திய அரசு ஏற்கனவே குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்த ஒப்பந்தம் செய்திருப்பதால் சீனாவின் அனுமதியை பெற்று ஹாங்காங் போலீஸ் விரைவில் அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது