சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம்: நீர்வளத்துறை செயலாளர் பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வாரியமோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று டெல்லியில் செய்தியாளர்க்ளிடம் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
காவிரி நீர் விவகாரத்தில் அமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. வாரியமோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் அதில் பிரச்சனை இல்லை.
இதில் அவரவர் மாநில நலன் பார்வையில் பார்க்கப்படுகிறது. மத்திய அரசோ கூட்டாட்சி அடிப்படையில் பார்க்கிறது. நடுவர் மன்ற உத்தரவை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
‘ஸ்கீம்’ வகுக்குமாறு மத்திய அரசை கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது. எது சிறந்ததோ அது நடைமுறைப்படுத்தப்படும். காவிரி நீர் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம்.