டிரம்ப் வழக்கறிஞர் வீட்டில் ரெய்டு: எபி.பி.ஐ அதிரடி

டிரம்ப் வழக்கறிஞர் வீட்டில் ரெய்டு: எபி.பி.ஐ அதிரடி

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனின் அலுவலகம் மற்றும் தங்குமிடம் ஆகிய இடங்களில் எப்.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆபாச நடிகைக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனின் அலுவலகம் மற்றும் அவர் தங்கியுள்ள ஹோட்டல் அறை ஆகியவற்றில் நேற்று எப்.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நியூயார்க் கோர்ட் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனைக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். “எனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு அவகாரமான நிலை. நியாயமற்ற ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும். உண்மையான அர்த்தத்தில் இருக்கும் நமது நாட்டின் மீதான தாக்குதல் இது. நாமெல்லாம் எதற்கு எதிராக நிற்கிறோமோ அதன் மீதான தாக்குதல்” என டிரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply